இந்திக்குப் போகிறது மைனா
மைனா திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அதன் இயக்குநர் பிரபு சாலமோன் கூறியுள்ளார்.
7வது துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் மைனா பங்கேற்றுள்ளது. இதற்காக வந்திருந்த பிரபு சாலமோன் அங்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், மைனா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதை டப் செய்யும் திட்டம் இல்லை. முற்றிலும் புதிய நடிகர், நடிகைகளை வைத்து ரீமேக் செய்யப் போகிறேன்.
தற்போது தமிழில் ஒரு படம் செய்யவுள்ளேன். அதை முடித்த பின்னர் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் இந்தி மைனாவுக்கு வருவேன்.
படத்தின் திரைக்கதை அமைப்பு அனைத்து விதிமுறைகளையும் உடைப்பதாக இருந்ததே இப்படம் பெற்ற பெரிய வெற்றிக்குக் காரணம்.
கமல்ஹாசன், இயக்குநர் பாலா, திரைத்துறையின் முன்னணி இயக்குநர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். ரஜினிகாந்த் ஒரு படி மேலே போய், இப்படத்தில் சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று பாராட்டினார் என்றார் பிரபு.


Click it and Unblock the Notifications











