'மேக்கப் வேண்டா'..பார்வதி ஓமனகுட்டன்!

மிஸ் இந்தியா பட்டம் வென்ற கேரளத்து பேரழகி பார்வதி ஓமனக்குட்டன். பூர்வீகம் கடவுளின் சொந்த நாடாக இருந்தாலும் மும்பையில்தான் ஓமனா தற்போது வாசம் புரிகிறார்.
ஓமனக்குட்டனுக்கு இந்தி சினிமாவில் நுழைந்து ரசிகர்களின் நெஞ்சங்களை பந்தாடும் குறிக்கோள் ஒரு ஓரமாக இருக்கிறதாம். இருந்தாலும் சினிமாவுக்கு உடனடியாக வந்து விட மாட்டேன். சரியான நேரம் பார்த்து வருவேன் என்கிறார் ஓமனா.
பாலிவுட்டில் அவருக்குப் பிடித்த நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்தானாம். அவருடைய பிசிக் எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அதிலும் அவரது ஸ்டைல் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என்கிறார் சிரித்தபடி.
அதேபோல ஐஸ்வர்யாவின் அழகும், சுஷ்மிதாவின் பாந்தமான முகம் பிளஸ் வசீகர உடலமைப்பும் ஓமனாவுக்குப் பிடித்தமானவையாம். இருப்பினும் ஜீனத் அமன் காலம் கடந்தும் அழகை அழகாக வெளிப்படுத்தும் வசீகரப் பெண்மணி என பழசுக்கும் ஆதரவு தெரிவிக்கிறார் ஓமனா.
சரி மேக்கப் ஏன் பிடிக்காது என்றால், மேக்கப் போட்டுக் கொள்வதே இயற்கையை தாண்டி நாம் போவது என்றுதான் அர்த்தம். இயற்கையாக இருக்க வேண்டும். அதிக பூச்சுக்களால் நம்மை அழகாக்கிக் கொள்ள முடியாது. அக அழகுதான் முக்கியமானது. நமது உடலை சுதந்திரமாக சுவாசிக்க விட வேண்டும். எனவேதான் எனக்கு மேக்கப் பிடிக்காது என்று வியாக்கியானம் கூறுகிறார்.
இருந்தாலும் உதடுகளை எடுப்பாக்கி, இளசுகளை உசுப்பேற்ற உதவும் லிப்ஸ்டிக் ஓமனாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
எந்தா ஓமனே, எப்போ தமிழ் விஜயம்??


Click it and Unblock the Notifications











