ஆஸ்கர் விருது பட்டியல் லீக்?

By Staff

Oscar statue
ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியல் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப் பட்டியல் தவறானது, பொய்யானது, வெறும் வதந்திதான் என்று ஆஸ்கர் விருதினை வழங்கும் ஆஸ்கர் அகாடமி மறுத்துள்ளது.

ஆஸ்கர் விருதுகள் பட்டியல் என்ற பெயரில் இந்த செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் ஆஸ்கர் விருதுகள் பெற்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதினை வழங்கும் சலனப்பட கலை மற்றும் அறிவியல் அகாடமியின் (ஆஸ்கர் அகாடமி)லெட்டர்ஹெட்டில் இந்த முடிவுப் பட்டியல் உள்ளது. அகாடமியின் தலைவர் சிட் கேனிஸ் கையெழுத்தும் அதில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இதுதான் 81வது ஆஸ்கர் விருதுகள் பெறுவோரின் இறுதிப் பட்டியலாகும். மிகுந்த கவனத்துடன் இதைப் பெற்று கொடுத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலின் கூற்றுப்படி தி ரீடர் படத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் சிறந்த நடிகையாகவும், தி ரெஸ்ட்லர் படத்தில் நடித்த மிக்கி ரூர்க் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹெல்த் லெட்ஜர் சிறந்த துணை நடிகராகவும், அமி ஆடம்ஸ் சிறந்த துணை நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரஹ்மான் பெயர் இல்லை ..

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு மொத்தம் 3 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் (டேனி பாயல்), சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசைக்கான விருதில் ஸ்லம்டாக் மில்லியனர் இடம் பெறவில்லை.

இந்தப் பட்டியல் எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை.

ஆனால் இது முற்றிலும் வதந்தியான செய்தி என்று ஆஸ்கர் விருதுக் கமிட்டி மறுத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்கர் விருதுக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் லெஸ்லி அங்கர் கூறுகையில், இது முற்றிலும் முட்டாள்தனமானது, மோசடியான தகவல்.

விருது பெற்ற கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைப்படங்களுக்கான வாக்குகளை எண்ணும் பணியில் இன்னும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் அப்பணியே முடியவில்லை. அதற்குள் எப்படி விருதுகள் முடிவாக முடியும்.

இன்னும் விருதுக்குரியோரின் பட்டியல் தயாரிக்கப்படவே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா 22ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X