கின்னஸில் இடம்பெறும் பா!

By Staff

Amitabh Bachchan with Abhishek Bachchan
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள பா இந்தி திரைப்படம் விரைவில் கின்னஸில் இடம்பெறுகிறது.

அமிதாப் பச்சனின் ஏபி கார்ப்பரேஷன் தயாரிப்பில், பால்கி இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான படம் பா.

இதில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், வித்யா பாலன் நடித்துள்ளனர்.

அபிஷேக்கின் 12 வயது மகனாக ஆரோ எனும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார் அமிதாப்.

15 கோடி ரூபாய் நடுத்தர பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், அதை விட இரண்டு மடங்குக்கு மேல் வசூலித்து விட்டதாக வட இந்தியப் பத்திரிகைகள் கொண்டாடி வருகின்றன. சர்வதேச மீடியாவும் இந்தப் படத்தைப் பாராட்டி விமர்சனங்கள் எழுதியுள்ளன.

இந்த நிலையில், பா படம், உலக சாதனை செய்துள்ளதாக கின்னஸ் உலக சாதனைப் புத்தக வெளியீட்டாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆரோ என்ற பாத்திரத்தில் அமிதாப் 12 வயது சிறுவனாக நடித்திருப்பது உண்மையிலேயே வியப்புக்குரியது என்றும், உலகில் வேறு எந்த மொழியிலும் இந்த மாதிரி பாத்திரப் படைப்பு இல்லாததால், உலக சாதனைப் புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெறுவதாக கின்னஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

67 வயது நடிகர் 12 வயது சிறுவனாக நடித்திருப்பது உலகின் வேறு எந்த மொழியிலும் நடக்காத விஷயம் என்பதாலேயே இந்தப் பெருமை பா வுக்கு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X