கோவா சர்வதேச இந்தியப் பட விழாவில் பசங்க

கோவாவில் 40வது சர்வதேச இந்திய திரைப்பட விழா 23ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க விழாவுக்கான சிறப்பு விருந்தினராக வஹீதா ரஹ்மான் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் மம்முட்டி இடம் பெறுகிறார்.
தொடக்க விழாவை கபீர் பேடியும், திவ்யா தத்தாவும் தொகுத்து அளிப்பார்கள்.
இந்த விழாவில் இந்தியப் பிரிவில் மொத்தம் 26 பொழுது போக்கு மற்றும் டாக்குமென்டரிப் படங்கள் இடம் பெறுகின்றன.
இதில் தமிழிலிலிருந்து பசங்க படம் மட்டும் தேர்வாகியுள்ளது. மலையாளத்திலிருந்து குட்டி ஷிராங்கு, கேழ்க்குன்னுண்டோ ஆகியவை இடம் பெறுகின்றன. கன்னடத்திலிருந்து இஜ்ஜோடு இடம் பெறுகிறது.
Comments
இந்தியப் பிரிவு கோவை சர்வதேச இந்தியப் பட விழா திரைப்பட விழா பசங்க film festival goa iffi indian panorama pasanga


Click it and Unblock the Notifications