twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் அடுத்த படம் ராணா... தலைப்பு முடிவானது!

    By Sudha
    |

    ரஜினியின் அடுத்த படத்தின் தலைப்பு ஹரா இல்லை என்பது குறித்து தட்ஸ்தமிழ் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

    இப்போது நமது செய்தி உறுதியாகியுள்ளது. ரஜினி படத்தின் தலைப்பு ஹரா அல்ல... ராணா என ரஜினி தரப்பில் உறுதிப்படுத்திவிட்டனர்.

    ராணா என்றால் மன்னன் என்று பொருள். ராஜபுத்திர மன்னர்கள், மராட்டிய, கூர்ஜர பகுதியின் ராஜ வம்சத்தினர் இந்தப் பெயரை பயன்படுத்துவார்கள்.

    சமஸ்கிருதப் பெயராக இருந்தாலும், ராணா ஒரு பெயர்ச் சொல் என்பதால், தமிழில் வரிவிலக்கு கிடைக்கும் என்று ரஜினியிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

    இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த ஆண்டு அவர் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படம் என்பதால் ராணாவை முடித்துத் தருகிறார்.

    எந்திரனுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேல் ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர்.

    கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படம் சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வந்தது. இதை ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்கியிருந்தார்.

    ஆனால் தற்போது இதை அப்படியே மாற்றி, முழுமையான ரஜினி படமாக உருவாகிறது. ராணா படத்தில் குறிப்பிட்ட பகுதி மட்டும் அனிமேஷன் காட்சிகளாக இருக்கும். அனிமேஷன் பகுதியை செளந்தர்யா இயக்க மற்றவற்றை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார்.

    English summary
    Close sources of Superstar Rajini confirms that his next movie's title will be Rana. According to the sources, K S Ravikumar direct the movie and Rathnavel will handle the camera. Rahman is the music director of Rana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X