மீரா-ரீமா போட்டா போட்டி!

By Staff

Meera Jasmine with Reemasen
பத்மினி-வைஜயந்தி ஸ்டைலில் மீரா-ரீமா போட்டி நடனம்

தெலுங்கில் ரீமா சென் நடித்த முதல் திரைப்படம் எமகோலா. இந்தப் படத்தை இப்போது தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள், இந்திரலோக இளவரசன் எனும் பெயரில். கவர்ச்சியில் ஏற்கெனவே வெளுத்துக் கட்டும் ரீமா, தெலுங்கு தேச அன்பர்களுக்காக இந்தப் படத்தில் ஸ்பெஷல் கவர்ச்சி தரிசனம் தந்திருந்தார்.

மேலும் இந்தப் படத்துக்காக மீரா ஜாஸ்மினுடன் போட்டி நடனம் ஒன்றிலும் ஆடியுள்ளார் ரீமா.

ஜெமினிகணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் பத்மினியும், வைஜயந்திமாலாவும், 'சாதுர்யம் பேசாதேடீ...என் சலங்கைக்கு பதில் சொல்லடீ..'' என்று போட்டி நடனம் ஆடுவார்களே.... அப்படியொரு போட்டி நடனப் பாட்டு அது. ஆனால் அந்த மாதிரி பாரம்பரிய நடனம் இதில் கிடையாது. இளசுகளின் மனங்களை வெறியேற்றும் கலக்கல் குத்துப் பாட்டு இது.

'ரெட்ட குதிர பூட்டி ஒத்த சவாரி...' என்று தொடங்கும் இந்தப் பாடலைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் மிரண்டு போய், 32 இடங்களில் கத்தரி வைத்திருக்கிறார்கள்.

படத்தின் கதைப்படி, மீரா ஜாஸ்மின் கல்லூரி மாணவி. ரீமாசென், காபரே அழகி. வழக்கமாக, 2 கதாநாயகிகள் பங்குபெறும் படங்களில் ஒரு கதாநாயகி காதலுக்கும், இன்னொரு கதாநாயகி கவர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில், ரீமாசென்னுக்கு போட்டியாக கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார், மீரா ஜாஸ்மின்.

இரண்டு பேரின் கவர்ச்சி நடனமும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதே பரபரப்பை தமிழிலும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு.

படத்தின் கதை இதுதான்: இந்திரலோகத்து இளவரசன் ஒரு முக்கிய வேலையாக பூமிக்கு வருகிறான். ஒரு காபரே விடுதியில் ரீமாசென்னை சந்தித்து, அவரின் கவர்ச்சியில் மனதை பறிகொடுக்கிறான்.

தனால் ஏற்படும் விளைவுகள்தான் படம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X