தெலுங்குக்கு போகும் சசி-சமுத்திரக்கனி!

பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கும் இந்த தெலுங்கு நாடோடிகளின் இயக்குநரும் நம்ம சமுத்திரக் கனிதான். ஆனால் நாயகனாக நடிக்கவிருப்பவர் ரவி தேஜா. உடன் நண்பர்களாக நடிக்க லாரன்ஸ், அல்லாரி நரேஷ் மற்றும் நவ்தீப் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
பிரம்மானந்தம், அனில் ஆகியோரும் படத்தில் உண்டு.
அப்போ சசிகுமார்?
தெலுங்கில் நாயகனாக நடிக்காவிட்டாலும், முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.
சுந்தர் சி பாபுவின் பாடல்களை அப்படியே தெலுங்கிலும் பயன்படுத்திக் கொள்கிறார்களாம். ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு துவங்குகிறது.
ஏற்கனவே இந்தியிலும் நாடோடிகள் ரீமேக் ஆகிறது. ஷாஹித் கபூர், ஸ்லம்டாக் புகழ் தேவ் படேல் ஆகியோர் நடிக்கவுள்ளனர். அதேபோல கன்னடத்திலும் இப்படத்தை ரீமேக் செய்யவுளளனர். இந்த நிலையிலும் தெலுங்கிலும் இப்படம் ரீமேக் ஆவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











