செல்வா - ஆண்ட்ரியா: 'கோயிங் ஸ்டெடி'!

By Staff

Andrea Jeremiah
செல்வராகவனிடமிருந்து சோனியா அகர்வால் விவாகரத்து கேட்கக் காரணமானவர் எனக் கூறப்பட்ட, ஆண்ட்ரியாவை வைத்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன்.

இது மாலை நேரத்து மயக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகன் தனுஷ்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கார்த்தி - சந்தியா நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் திடீரென்று அந்தப் படம் கைவிடப்படுவதாக அறிவித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் துவங்கினார்.

கிட்டத்தட்ட 3 வருடங்களையும் 35 கோடிகளையும் விழுங்கிய பின்னும் இன்னும் படப்பிடிப்பு, கிராபிக்ஸ் என இழுத்துக் கொண்டிருக்கிறது அந்தப் படம்.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார் செல்வராகவன். இந்தப் படத்தின் நாயகன் செல்வாவின் தம்பி தனுஷ். நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

விவாகரத்து, சோனியாவின் குற்றச்சாட்டு என எத்தனை தடங்கல் வந்தாலும் ஆண்ட்ரியா விஷயத்தில் செல்வராகவன் உறுதியாக இருப்பதையே இது காட்டுவதாகக் கூறுகிறார்கள் கோடம்பாக்கவாசிகள்.

இதுவரை திரையில் சொல்லப்படாத ரொமான்டிக் கதை இது என்று படம் குறித்த அறிமுக பேட்டியில் கூறியுள்ளார் செல்வராகவன்.

பார்க்கத்தானே போகிறோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X