தூம் 3... வில்லன் ஷாரூக்!!

இதனை, படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆதித்ய சோப்ரா அறிவித்தார்.
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம் தூம் மற்றும் தூம் 2. இவற்றின் தொடர்ச்சி தூம் 3 என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளது.
முதல் இரு படங்களையும் சஞ்சய் காட்வி இயக்கினார். ஆனால் அவர் மூன்றாவது படத்தை இயக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக ஆதித்ய சோப்ராவின் நிறுவனத்திலிருந்து சஞ்சய் விலகிக் கொண்டதால், தூம் 3-ஐ ஆதித்ய சோப்ராவே இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹீரோ பாத்திரத்தை விட அதிக அளவு பேசப்படுவது வில்லன் வேடம்தான். தூம் 2-ல் ஹ்ரித்திக்தான் அந்த வேடத்தில் நடித்தார். இந்த வேடத்தில் நடிக்குமாறு ரஜினியிடம் ஆதித்ய சோப்ரா கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பின்ன யாஷ் சோப்ராவின் உதவியாளர் இதனை மறுத்தார்.
இப்போது அந்த வில்லன் வேடத்தை ஷாரூக்கான் செய்கிறார். போலீஸ் அதிகாரிகளாக அபிஷேக் பச்சனும், உதய் சோப்ராவும் நடிக்கின்றனர்.
கதாநாயகி ஐஸ்வர்யா ராயா அல்லது வேறு புதுமுகமா என்பது விரைவில் வெளியிடப்படும் என்று ஆதித்ய சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











