ஏழாம் அறிவு ஆடியோ ரிலீஸ்... ஷாரூக்கான் வெளியிடுகிறார்?
சென்னை: சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ஏழாம் அறிவு படத்தின் இசை வரும் 22-ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக, பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானை படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி வரவழைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த செய்தியை தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.
கஜினிக்குப் பிறகு ஏ. ஆர். முருகதாஸ், சூர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ஏழாம் அறிவு. இந்த படத்தின் ஆடியோ வரும் 22-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் தனக்கிருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ரா ஒன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் உள்ள ஷாருக், தற்போது ஏழாம் அறிவு படத்தின் ஆடியோவை வெளியிட சென்னைக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
ரான் ஒன் தமிழிலும் டப் செய்யப்படுவதால் இது போன்ற ஆடியோ வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டால் விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார் ஷாருக்கான்.
இது தவிர ஆடியோ வெளியீட்டு அன்று நடிகை இஷா ஷெர்வானியின் நடனம் விழாவில் இடம்பெறும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











