பில்லா-2: செளந்தர்யா உறுதி

By Staff

Soundarya
அஜீத்தை வைத்து பில்லா படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவிருப்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஜினிக்கு மிகப் பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படம் பில்லா. 80களில் வெளியான பில்லா சமீபத்தில் அஜீத்தை வைத்து ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு அஜீத்தின் நிலைமையும் நிறையவே மேம்பட்டுள்ளது.

இந்த நிலையில் பில்லாவின் 2ம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்.

தற்போது செளந்தர்யா, ரஜினியை வைத்து சுல்தான் தி வாரியர் என்கிற அனிமேஷன் படத்தை முழு மூச்சாக எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பில்லாவின் 2ம் பாகத்ைத எடுக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் செளந்தர்யா.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். பில்லா 2ம் பாகத்தில் அஜீத் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அஜீத் ஏகன் படத்தில் நடித்து வருவதால், அதை முடித்து விட்டு வருவதற்கு வசதியாக அடுத்த ஆண்டுக்கு பில்லா-2 ஷூட்டிங்கை திட்டமிட்டிருக்கிறார் செளந்தர்யா.

பில்லா-2 குறித்து செளந்தர்யா கூறுகையில், எனது தந்தையுடன் ஆலோசித்த பின்னர்தான் பில்லாவின் 2ம் பாகம் குறித்து நான் தீர்மானித்தேன். பில்லா-2 தொடர்பாக தற்போது தீவிர விவாதம் நடந்து வருகிறது.

புதிய குழு பில்லா-2 படத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பில்லா படத்தின் ஒரிஜினல் டீமையும் இதில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளோம். அதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

பில்லாவின் 2ம் பாகத்தை எடுப்பது குறித்து நான் அப்பாவுடன் பேசியபோது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். தனது கேரக்டரில் இன்னொருவர், 2ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை பார்த்து ரசிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

பில்லா-2வில் அப்பாவை நடிக்க வைக்கும் யோசனையே இல்லை. எனவே இதில் அப்பா இருப்பார் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றார் செளந்தர்யா.

இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X