18 மொழிகளில் ரஜினியின் சுல்தான்!

அந்த தைரியம்தான் இன்னும் ஹாரி பாட்டர்களையும், ஸ்பைடர்மேன்களையும், ஜூராஸிக் பார்க்குகளையும் பல பாகங்களாக வெளியிட வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆரம்பத்தில் ஒரு சின்ன படமாகத் திட்டமிடப்பட்ட ரஜினியின் முதல் அனிமேஷன் திரைப்படம் சுல்தான் தி வாரியர் நாளுக்குநாள் வளர்ந்து இன்று ரூ.70 கோடி மெகா பட்ஜெட் படமாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
இந்தப் படத்தை 3 மொழிகளில் மட்டுமே தயாரிக்கும் திட்டத்திலிருந்த சௌந்தர்யா ரஜினிகாந்த், இப்போது உலகின் 18 மொழிகளில் சுல்தானை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
'இந்தப் படத்தின் விசேஷம், இது குழந்தைகளை மட்டுமல்லை, பெரியவர்களையும் சந்தோஷப்படுத்தும் அளவு பிரமாண்ட ஆக்ஷன் மற்றும் கண்களுக்கு விருந்து படைக்கும் அனிமேஷன் காட்சிகளுடன் வரவிருப்பதுதான். இந்திய சினிமா தொழில்நுட்பத்தின் தரம் உலகின் எந்த நாடுகளுக்கும் சளைத்ததல்ல என்பதை எடுத்துச் சொல்லும் படம் இது...' என்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா.
'அப்பாவின் படம் எப்படி இருக்க வேண்டும் என அவரது ரசிகர்களும், முக்கியமாக குழந்தைகளும் விரும்புகிறார்களோ அதற்கு ஈடுகொடுக்கும் படமாக இதை உருவாக்கியிருக்கிறேன்...', எனும் சௌந்தர்யாவுக்கு, மற்ற ஆங்கிலப் படங்களைப்போல உலகமெங்கும் ஒரேநாளில் தனது தந்தையின் படம் வெளியாக வேண்டும் என்று ஆசையாம்.
இந்த விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்துள்ளது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். உலகமெங்கும் ஒரே நேரத்தில் ரிலீசாகிற முதல் இந்தியப் படம் என்றால் அது சுல்தானாகத்தான் இருக்கும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச் உள்பட பதினெட்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. அனிமேஷன் என்பதால் பலமொழிகளில் இப்படத்தைப் பேசவைப்பது சௌந்தர்யாவுக்கு எளிதாக உள்ளதாம்.
ரஜினி படங்களை ஆங்கில சப் டைட்டில்களுடன் மட்டுமே பார்த்த சர்வதேச ரசிகர்களுக்கு, சுல்தான் ஒரு நேரடி விருந்து!


Click it and Unblock the Notifications











