திரைக் கவிஞர்களுக்கு சங்கம் - வைரமுத்து

அவருடைய இந்த எண்ணத்தின் பின்னணி குறித்துக் கேட்டோம். அவர் கூறியதாவது:
ஏதோ நான் ஒரு பேச்சுக்கு சொன்னதாக நினைக்க வேண்டாம். எத்தனையோ பிரிவினருக்கு சங்கங்கள் உள்ளன. திரைக் கவிஞர்களுக்கும் சங்கம் வேண்டும் என்பது ஏதோ சம்பளத்தை உயர்த்திக் கேட்பதற்கல்ல. உணர்வுகளை தனித்தனியாகக் காட்டுவதைவிட ஒரு சங்கமாகக் காட்டும்போதுதான் வலிமை.
சமீப காலமாய் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ மேடைகளுக்கு என்னை மட்டும் அழைக்கிறார்கள். வேறு கவிஞர்கள் யாரையும் அந்த மேடைகளில் நான் பார்ப்பதில்லை.
இதுவே ஒரு சங்கமாக இருந்து எங்கள் உணர்வுகளைக் காட்டினால் அதன் வீர்யம் ராஜபக்சேவையும் அதிர வைக்கும். கவிஞனின் குரலுக்குள்ள மகத்துவம் அது.
இந்த சங்கத்துக்கு ஐயா வாலி தலைமையேற்க வேண்டும். பா விஜய் போன்ற இளம் கவிஞர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும், என்றார்.
Comments
association இசை வெளியீடு சினிமா ஞாபகங்கள் தமிழ் வைரமுத்து cinema film lyricist gnabagangal pa vijay vairamuthu


Click it and Unblock the Notifications