'வில்லு', 'கஞ்சீவரம்' ரிலீஸ்: ஷாக்கில் கோலிவுட்!

விஜய் நடித்து பொங்கலுக்கு வரவிருக்கும் வில்லு படம்தான் முன்கூட்டியே இணையதளங்களில் வெளியாகி தமிழ் சினிமா உலகையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டுள்ளது!.
முன்பெல்லாம் படம் வெளியான சூட்டோடு இணையதளத்தில் அதை வெளியிட்டு வந்தார்கள். விஞ்ஞானம் வளர்கிறதல்லவா... இப்போதல்லாம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அந்தப் படத்தை வெளியிடுவதுதான் புது ஸ்டைல்.
அதன்படி இப்போது இணையத்தில் அதிரவைத்துக் கொண்டிருக்கும் படம் விஜய் நடித்து பொங்கலுக்கு வரவிருக்கும் வில்லு.
பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தைதான் பெரிதும் நம்பியுள்ளது, தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அய்ங்கரன் நிறுவனம்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன், பிரிண்டிங் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய காட்சிகள், 45 நிமிட நேரம் ஓடும் அளவுக்கு, இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.
விஜய் அறிமுகமாகும் காட்சி, சண்டைக் காட்சிகள், நயன்தாராவுடன் பாடும் ஒரு பாட்டு என பல காட்சிகள் பிட்டு பிட்டாக அப்லோட் செய்யப்பட்டுள்ளன.
விருதுக்காகவே ப்ரியதர்ஷன் எடுத்த கஞ்சீவரம் படமோ முழுமையாகவே இணையத்தில் கிடைக்கிறது.
சிம்புவின் சிலம்பாட்டமும் இணையத் தளத்தில் சுற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications











