யுவன்சங்கர் ராஜாவை இயக்கும் விஷ்ணுவர்தன்!

வரும் ஜனவரியில் சென்னையில் பிரமாண்ட இசைக் கச்சேரி நடத்துகிறார் யுவன். உள்ளூரில் அவர் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக ஒரு அட்டகாசமான மியூசிக் வீடியோ தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதில் நடிக்கப் போகிறவர் யுவன்சங்கர் ராஜாதான். விஷ்ணுவர்தன் இயக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
விஜய்டிவி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளின்போது பாடல்களுக்கு அவர் நவீன உடைகளில் தோன்றி ஆடவும் செய்தார். இப்போது தமிழின் நம்பர் ஒன் இசையமைப்பாளரான யுவனும் பாடி ஆடப் போகிறார்.
Comments


Click it and Unblock the Notifications