மகா குழப்பத்தில் தசாவதாரம்!

கமல்ஹாசன் படம் ஒன்று இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலை சந்திப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் குழப்பமான போக்கே தசாவதாரத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த மகா சிக்கலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
படம் காலவரையின்றி தள்ளிப் போடப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் கூறுகையில், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக படம் தள்ளிப் போயுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
படம் மட்டும் தள்ளிப் போகவில்லை. ஆடியோ வெளியீடும் கூட ஒத்திவைக்கப்பட்டு விட்டதாம். ஜாக்கி சானின் கால்ஷீட் கிடைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எப்போது ஆடியோ வெளியீடு நடைபெறும் என்பது குறித்தும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எதையும் தெரிவிக்கவில்லை.
2 வாரங்களுக்கு முன்புதான், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டதாகவும், கிராபிக்ஸ் வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் கூறியிருந்தார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால் அவர் சொன்னது போல அனைத்து வேலைகளும் இன்னும் முடியவில்லையாம். இந்திப் பதிப்புக்கு அடுத்த வாரம்தான் கமல்ஹாசன் டப்பிங்கே பேசப் போகிறாராம்.
தசாவதாரம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒரிரு வாரம்தள்ளிப் போகும். ஜாக்கி சானின் தேதிக்கேற்ப இதில் மாற்றம் ஏற்படலாம். படத்தை மே மாதத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று மட்டும் கூறினார்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்து ஆடியோவை ரிலீஸ் செய்வதற்காக ஜாக்கி சானுக்கு ரூ. 4.5 கோடி தர ஒத்துக் கொண்டுள்ளாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதுதவிர விழாவுக்கான ஏற்பாடுகளுக்கு மட்டும் ரூ. 2 கோடி செலவிடவுள்ளாராம் ரவிச்சந்திரன்.
இதை விட பெரும் குழப்பமாக, தசாவதாரம் ஆடியோ கேசட் மற்றும் சிடிக்கு இதுவரை 50 ஆயிரம் ஆர்டர் மட்டுமே வந்துள்ளதாம். இதனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனும், ஆடியோ உரிமையை வாங்கியுள்ள சோனி பிஎம்ஜி நிறுவனமும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
தசாவதாரம் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தொடர் குழப்பத்தால் கமல்ஹாசன் கடும் அப்செட்டிலும், கோபத்திலும் உள்ளாராம். ரவிச்சந்திரன் செய்யும் குழப்பத்தால் படம் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் கமல் தரப்பு கவலைப்படுகிறது.
என்னதான் நடக்கிறது ரவி சார்??


Click it and Unblock the Notifications











