2013- நட்சத்திரங்களாய் ஜொலித்த புதுமுகங்கள்!

By Shankar

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு மட்டுமே 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இந்த ஆண்டின் கடைசி வெள்ளியன்றும் சில படங்கள் வெளியாகவிருக்கின்றன.

அதிக படங்கள் வெளியானது போலவே, புதிய நாயகன், நாயகிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

அதிகப் படங்கள் வெளியானாலும், எப்படி மிகச் சில படங்கள் மட்டுமே ஜெயிக்கின்றனவோ, அதுபோலத்தான் வெகு சில புதுமுகங்களே நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக்

2013-ம் ஆண்டு அறிமுகமான ஹீரோக்களில் முக்கியமானவர் கார்த்திக்கின் மகன் கவுதம். கடல் என்ற மொக்கைப் படத்தில் அறிமுகமானாலும், அடுத்தடுத்து வை ராஜா வை, என்னமோ ஏதோ, சிப்பாய், நானும் ரவுடிதான் என நான்கு படங்களைக் கையில் வைத்துள்ளார். 2014- இவருக்கு நல்ல ஆண்டாக அமையும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

நவீன் பாலி

நவீன் பாலி

நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். ஏற்கெனவே மலையாளத்தில் பிரபலமாக உள்ள நடிகர். புதிய தமிழ்ப் பட வாய்ப்புகளும் இவருக்கு வந்துள்ளன.

பிரகாசிக்கவில்லை

பிரகாசிக்கவில்லை

இவர்களைத் தவிர, கிட்டத்தட்ட 50 புதுமுகங்கள் அறிமுகமாயினர். ஒருவர் பெயர் கூட யாருக்கும் நினைவில் இல்லை எனும் அளவுக்குதான் அவர்கள் படங்கள் அமைந்தன.

ஹீரோயின்கள்

ஹீரோயின்கள்

புது ஹீரோயின்களில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நஸ்ரியா , ராதா மகள் துளசி, நிவேதா தாமஸ், மிருத்திகா , சுரபி ஆகியோர் ஓரளவு பளிச்சென்று அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X