twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிமுருகன், இறுதிச்சுற்று 2016 ம் ஆண்டின் 'டாப் 5' வெற்றிப்படங்கள்

    By Manjula
    |

    சென்னை: 2016 ம் வருடம் ஆரம்பித்து முழுதாக 3 மாதம் முடிவதற்குள், 46க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி விட்டன.

    வருடத்தின் துவக்க நாளான புத்தாண்டில் மாலை நேரத்து மயக்கம் உட்பட, மொத்தம் 5 படங்கள் வெளியாகி எண்ணிக்கையை வெற்றிகரமாகத் துவங்கி வைத்தன.

    புத்தாண்டின் ராசி போல இதுவரை 46 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது.ஆனால் இந்த 46 படங்களில் வெற்றி என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியது வெறும் 5 படங்கள் தானாம்.

    இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களின் பட்டியல் மற்றும் வெற்றிப்படங்கள் போன்றவற்றை இங்கே பார்க்கலாம்.

    ஜனவரி -18

    ஜனவரி -18

    மாலை நேரத்து மயக்கம், அழகுக் குட்டி செல்லம், கரையோரம், நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, தற்காப்பு, பேய்கள் ஜாக்கிரதை, ரஜினிமுருகன், தாரை தப்பட்டை, திகிலோடு விளையாடு, அரிதாரம், குரங்கு கையில பூமாலை, மீனாட்சி இளங்கோவன், கெத்து, கதகளி, மூன்றாம் உலகப்போர், நனையாதே மழையே, அரண்மனை 2 மற்றும் இறுதிச்சுற்று என்று மொத்தம் 18 படங்கள் வெளியாகின.

    அரண்மனை 2, ரஜினிமுருகன்

    அரண்மனை 2, ரஜினிமுருகன்

    ஜனவரி மாதத் திரைப்படங்களில் அரண்மனை 2, ரஜினிமுருகன் மற்றும் இறுதிச்சுற்று ஆகிய 3 படங்களும் நல்ல வசூலைக் கொடுத்தன. இதில் ரஜினிமுருகன் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இதன் மூலம் இந்த ஆண்டின் 50 நாட்களைக் கடந்த முதல் படம் என்ற சாதனையை ரஜினிமுருகன் தக்க வைத்துக் கொண்டது.

    பிப்ரவரி - 16

    பிப்ரவரி - 16

    2 நாட்கள் குறைவாக இருக்கிறது என நினைத்தார்களோ என்னவோ ஜனவரி மாதத்தை விட 2 படங்கள் குறைவாகவே பிப்ரவரியில் வெளியாகின.

    விசாரணை, பெங்களூர் நாட்கள், சாகசம், சேதுபூமி, நாளை முதல் குடிக்க மாட்டேன், வில் அம்பு, அஞ்சல, ஜில் ஜங் ஜக், இரண்டு மனம் வேண்டும், வெண்ணிலாவின் அரங்கேற்றம், நவரச திலகம், மிருதன், சேதுபதி, நையப்புடை, கணிதன், ஆறாது சினம் என்று மொத்தம் 16 படங்கள் வெளியாகின.

    விசாரணை

    விசாரணை

    இதில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் வெளியான விசாரணை நல்ல லாபத்தை விநியோகஸ்தர்களுக்கு பெற்றுக் கொடுத்தது. மிருதன், சேதுபதி, கணிதன் 3 படங்களும் ரொம்பவும் லாபமில்லை, ரொம்பவும் நஷ்டமில்லை என்ற விதத்தில் அமைந்தன.

    மார்ச் 12

    மார்ச் 12

    மார்ச் மாதத்தில் சவுகார்பேட்டை, பிச்சைக்காரன், போக்கிரி ராஜா, காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம்,நட்பதிகாரம், கோடை மழை, புகழ், விடாயுதம், ஆகம், என்று தணியும், சவாரி என்று இதுவரை மொத்தம் 12 படங்கள் வெளியாகியுள்ளன.

    3 மாதத்தில் 46

    3 மாதத்தில் 46

    ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என 3 மாதம் முடிவதற்குள் இதுவரை 46 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகப் படங்கள் ஜனவரி மாதத்தில் வெளியாகி இருக்கிறது.

    5 படங்கள்

    5 படங்கள்

    இந்தப் படங்களில் போட்ட பணத்தை மீட்டுக் கொடுத்தது வெறும் 5 படங்கள் மட்டும் தானாம். அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் அரண்மனை 2, இறுதிச்சுற்று, ரஜினிமுருகன் என 3 படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பிப்ரவரி மாதத்தில் விசாரணையும், மார்ச் மாதம் வெளியான படங்களில் பிச்சைக்காரன் திரைப்படமும் வெற்றி பெற்றிருக்கிறது.

    பெரிய நடிகர்கள்

    பெரிய நடிகர்கள்

    இதில் கதகளி, தாரை தப்பட்டை, பெங்களூர் நாட்கள், ஜில் ஜங் ஜக் , மிருதன், ஆறாது சினம், சேதுபதி,கணிதன்,போக்கிரி ராஜா மற்றும் காதலும் கடந்து போகும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், வசூலில் பெரிதாக சாதிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

    மார்ச் 25

    மார்ச் 25

    இந்த மாதம் முடிய ஒருவாரம் உள்ள நிலையில், இன்னும் எத்தனை படங்களை வெளியிடப் போகின்றனர் என்பது தெரியவில்லை. எது எப்படியோ மார்ச் முடிவதற்குள் தமிழ் சினிமா 50 என்ற எண்ணிக்கையை வெற்றிகரமாகத் தொட்டு விடும் என்பதில் மட்டும் எள்ளளவும் சந்தேகமில்லை.

    இப்படியே போனால் தமிழ் சினிமா மிகப்பெரிய நஷ்டத்தையே சந்திக்க வேண்டி வரும்.படைப்பாளிகள் சுதாரித்துக் கொள்வார்களா? இல்லை 2015 போல கோட்டை விடுவார்களா? பார்க்கலாம்.

    English summary
    2016: Top 5 Tamil Hit Movies List - Aranmanai 2, Irudhi Suttru, Rajini Murugan, Visaranai, Pichaikaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X