Year Ender 2023: லட்டு போல கிடைத்த வாய்ப்பு.. கோட்டை விட்ட கோலிவுட் இயக்குநர்கள்.. எல்லாமே ஃபிளாப்!
சென்னை: சினிமாவில் கேப்டன் ஆஃப் தி ஷிப் என்றாலே அது இயக்குநர்கள் தான். அவர்களே எனக்கென்ன என படங்களை இயக்கி முன்னணி நடிகர்களையே முணங்க வைத்து விடுகின்றனர்.
இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ள நிலையில், இந்த ஆண்டு அப்படி கிடைத்த பெரிய வாய்ப்பை தவற விட்ட டாப் 5 இயக்குநர்கள் பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
இறைவன் - அகமத்: ஜெயம் ரவி, நயன்தாரா கால்ஷீட் கிடைத்து கூடவே விஸ்வரூபம் வில்லன் கால்ஷீட் வரை கிடைத்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் இயக்குநர் அகமத் இறைவன் என டைட்டிலை எல்லாம் தாறுமாறாக வைத்து விட்டு சைக்கோ படத்தை எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் எடுத்து வைத்து இந்த ஆண்டு பெரிய ஃபிளாப் படமாக இறைவன் படத்தைக் கொடுத்து விட்டார். உதயநிதியை வைத்து கடைசியாக மனிதன் படத்தை எடுத்த அகமது பல ஆண்டுகள் கழித்து வாய்ப்பு கிடைத்தும் கோட்டை விட்டார்.

ஜப்பான் - ராஜு முருகன்: கார்த்தியின் 25வது படம் என்கிற லட்டு போன்ற வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை வைத்து தட்டித் தூக்காமல் ஆரம்பத்திலேயே ஹீரோவுக்கு ஏய்ட்ஸ் என கார்த்தி ரசிகர்களையே கடுப்பாக்கி விட்டார். ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜுமுருகனுக்கு இந்த ஆண்டு கிடைத்த நல்ல வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சந்திரமுகி 2 - பி. வாசு: சந்திரமுகி திரைப்படம் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஓடியது. அந்த டைட்டிலுக்கே படம் 100 நாள் ஓடியிருக்கும். ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லக்ஷ்மி மேனன், வடிவேல் என நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய சந்திரமுகி படத்தின் Spoof படத்தை எடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பெரிய வாய்ப்பை பி. வாசுவும் வேஸ்ட் பண்ணி விட்டார்.

அகிலன் - கல்யாண கிருஷ்ணன்: பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படத்தில் நடித்து முடித்த ஜெயம் ரவியை இந்த ஆண்டு அவசர அவசரமாக நடிக்க வைத்து அகிலன் எனும் படத்தைக் கொடுத்து ஆல் அவுட் செய்து விட்டார். அதிலும், பிரியா பவானி சங்கருக்கு அந்த போலீஸ் கெட்டப் போட்டதை பலரும் ட்ரோல் செய்து தள்ளினர்.

அன்னபூரணி - நிலேஷ் கிருஷ்ணா: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தை இயக்கும் வாய்ப்பு நிலேஷ் கிருஷ்ணாவுக்கு கிடைத்தது. ஷங்கர் பட்டறையில் இருந்து வந்த அட்லீயை போலவே இவரும் நல்ல ஹிட் படத்தைக் கொடுப்பார் என எதிர்பார்த்த நயன்தாராவுக்கே அல்வா கொடுத்து விட்டார். இவர்கள் மட்டுமின்றி மேலும், சிறு பட்ஜெட்டில் முதல் பட வாய்ப்புக் கிடைத்தும் பல இயக்குநர்கள் பல்வேறு சூழ்நிலை காரணமாக வெற்றியை ருசிக்க முடியாமல் போய் விட்டனர். சில பிரபல இயக்குநர்கள் படங்கள் பார்க்க படு சுமாராக இருந்தாலும், நடிகர்களின் ஃபேஸ் வேல்யூ காரணமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவிய தப்பித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











