twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜ்கோட்டில் நடிகை அமீஷா படேல் போட்டி

    By Staff
    |

    Amisha Patel
    அகமதாபாத்: பாலிவுட் நடிகை அமீஷா படேல், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார்.

    இதுகுறித்து குஜராத் மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் படேல் கூறுகையில், அமீஷா படேல் ராஜ்கோட்டில் போட்டியிடுகிறார். இத்தகவலை நான் அமீஷாவை போனில் அழைத்துத் தெரிவித்தேன். அவருடைய சம்மதத்தை வேண்டினேன். அவரும் சம்மதித்து விட்டார்.

    அமீஷா குஜராத்தைச் சேர்ந்தவர். அனந்த் மாவட்டம் சர்சா சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்தவர் அமீஷா. எனவே அமீஷா இந்த மண்ணின் மகள் ஆவார்.

    அமீஷாவின் குடும்பத்தினரை எனக்கு நன்கு தெரியும். அவரது வெற்றி உறுதி என்றார் ஜெயந்த் படேல்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X