ராஜபக்சேவை சந்தித்து 45 நிமிடம் பேசிய அமிதாப்!

By Chakra

Amitabh Bachan
கொழும்பு: கொழும்புவில் நடக்கவிருக்கும் 11 வது சர்வதேச இந்திய திரைப்படவிழா தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார் நடிகர் அமிதாப் பச்சன்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3 ந் தேதி முதல் 5 ந் தேதி வரை ஐஐஎப்ஏ எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதையொட்டி பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொழும்பு நகருக்கு சென்றார்.

அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரை ராஜபக்சேவும் அவரது மனைவி ஷிராந்தியும் வரவேற்றனர். அதிபரின் அலரி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அதிபர் ராஜபக்சேயுடன் சுமார் 45 நிமிடங்கள் அமிதாப்பச்சன் பேசினார். அப்போது இலங்கை, இந்திய சினிமா துறை பற்றி இருவரும் விவாதித்தனர் என்று அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இலங்கையில் சினிமா படம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ராஜபக்சே, இலங்கையில் சினிமா துறை வளர்ச்சிக்கு இந்தியாவுடன் சேர்ந்து தனது அரசு முழு முயற்சி மேற்கொள்ளும் என்று பதிலளித்தார்.

இருவரும் இந்திய - இலங்கை கிரிக்கெட் குறித்தும் நீண்ட நேரம் உரையாடினர்.

அதிபரின் மனைவி ஷிராந்தி, தான் அபிதாப்பின் படங்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X