பாலா படத்தில் ஆர்யா - விஷால்
நான் கடவுள் படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் ஆர்யா, விஷால் இருவரும் நாயகர்களாக நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
நான் கடவுள் வெளியாகி 6 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்னும் தனது புதிய படத்தை அறிவிக்கவில்லை இயக்குநர் பாலா. நடிகர் ஜீவா - ஜித்தன் ரமேஷை வைத்து புதிய படம் இயக்குகிறார் என்று முன்பு கூறப்பட்டது.
இப்போது அந்தப் படத்தில் விஷாலும் ஆர்யாவும் நடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் கதையாக இருக்கும் என்கிறார்கள். இந்தக் கதையை கேட்ட பிறகு ஆர்யா, விஷால் இருவருமே முழு மனதுடன் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதோடு, தாராளமாய் கால்ஷீட்டுகள் தரவும் ஒப்புக் கொண்டார்களாம்.
படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்கிறது பாலா தரப்பு.
இதற்கு முந்தைய படங்களைப் போலல்லாமல், இந்தப் படத்தை அடுத்த ஆண்டுக்குள் முடித்து வெளியிடவும் பாலா முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











