ஜீ டிவியுடன் கைகோர்க்கும் பாலா!

By Staff

Bala
ஜீ டிவி முதல்முதலாக தமிழில் தயாரிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பு பாலாவிடம் தரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, அட்வான்சாக ரூ. 2 கோடியும் பாலாவுக்கு தரப்பட்டுள்ளது.

பிரமிட் சாய்மிராவுக்காக முதல் பிரதி அடிப்படையில் பாலா இயக்கிவரும் நான் கடவுள் படம் முடிவடைந்துவிட்டது. ஆனால் திட்டமிட்ட பட்ஜெட்டுக்கு மேல் பாலா செலவு செய்துவிட்டதாக சாய்மிரா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பிரச்சினை தயாரிப்பாளர் கவுன்சில் பஞ்சாயத்திலிருக்கிறது.

இந்தப் படத்தை எப்படியாவது திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருதரப்பைச் சேர்ந்த நலம் விரும்பிகளும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் ஜீ எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க்குக்காக ஒரு படத்தை இயக்கித் தருமாறு பாலாவுக்கு ரூ.2 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளது ஜீ குழுமம்.

இந்தப் படம் தொடங்கப்படும் தேதி மற்றும் நடிகர் நடிகைகள் குறித்து விவரம் பின்னபர் வெளியிடப்படும் என ஜீ தெரிவித்துள்ளது.

இந்தப் படமாவது எந்தப் பிரச்சினையுமில்லாம தொடங்கினா சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X