நீரா ராடியாவாக நடிக்கும் பிரபல செக்ஸி மாடல் பூனம் ஜாவர்!

By Sudha

Poonam Jhwar
வெறும் வாயையே மெல்லுவது போல நடித்துக் காட்டும் சினிமாக்காரர்களுக்கு, பல்லுக்குப் பதமாக அவலே கிடைத்தால்... சும்மா இருப்பார்களா?

இதோ... அரசியல் பெண் தரகர் நீரா ராடியா பற்றி படமெடுக்கக் கிளம்பிவிட்டார்கள்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரத்தன் டாடா, ஆ ராசாவுக்கு நிகராக பிரபலம் ஆகியிருப்பவர், அரசியல் பெண் தரகரான நீரா ராடியா. அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் இவர் டெலிபோனில் பேசிய விவகாரமான பல தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமனம், இலாகா ஒதுக்கீடு, விவிஐபிக்களின் தனிப்பட்ட சமாச்சாரங்கள் என அவர் 'டிஸ்கஸ்' பண்ணாத, முடிவு செய்யாத விஷயங்களே இல்லை எனும் அளவுக்கு வாஜ்பாய் காலம் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.

இந்த பவர் புரோக்கர் நீரா ராடியா பற்றி '2ஜி ராடியா-ஷன்' என்ற தலைப்பில் புதிய படம் எடுக்கத் துவங்கிவிட்டனர், பாலிவுட்டில்.

இங்கிலாந்தைச்சேர்ந்த 'ஹிடன் குரூப்' இப்படத்தை தயாரிக்கிறது. 'மிஸ்டர் யா மிஸ்' படத்தை இயக்கிய டைரக்டர் சட்சித் புரானிக் இயக்குகிறார். ஆலிவுட் கேமராமேன் மாத்யூ புளுட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில், நீரா ராடியா கதாபாத்திரத்தில், மாடல் அழகியும், நடிகையுமான பூனம் ஜாவர் நடிக்கிறார். இவர், டாப்லெஸ் போஸ்கள் கொடுத்து பிரபலமான மாடல்.

இந்த வாய்ப்பு குறித்து பூனம் ஜாவர் கூறுகையில், "இது ஒரு வித்தியாசமான முயற்சி. நீண்ட ஆலோசனைக்குப்பிறகுதான், நீரா ராடியா பற்றி படம் எடுக்க திட்டமிட்டார்கள். ஏனென்றால், அதில், சதி, அதிகாரம், சுரண்டல் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பதால், படம் திரில்லாக இருக்கும் என்று கருதினார்.

நான் நீரா ராடியா போலவே இருப்பதால், என்னை அந்த கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். இதில் நான் கமிட்டான பிறகு, நீரா ராடியா கதாபாத்திரம் குறித்து நான் ஆய்வு செய்து வருகிறேன். அவரை நேரில் சந்திப்பது சாத்தியம் இல்லை என்பதால், அவரைப்பற்றிய கட்டுரைகளை படித்தேன். அவரது பழைய புகைப்படங்களையும் பார்த்தேன். அதன் அடிப்படையில், எனது பாணியில் நடிப்பேன்.

நீரா ராடியா, கிட்டத்தட்ட என்னைப்போல, சர்ச்சைகளை கண்டு பயப்படாத துணிச்சல்காரர். இவ்வளவு நடந்த பிறகும், அவர் பதற்றமின்றி இருப்பதே அதற்கு சான்று... அதுதான் அவரிடம் எனக்குப் பிடித்தமான விஷயம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X