நிழலில் வெற்றி - நிஜத்தில் தோல்வி!

ஷாருக்கான் பயிற்சியாளராக கலக்கிய சக் தே இந்தியா படத்தில் மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனைகளில் ஒருவராக நடித்தவர் கிமி லல்தாவ்லா. இப்படத்தில் நடித்ததால் மிஸோரம் முழுவதும் அறியப்பட்ட முகமாக மாறினார் கிமி.
படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹாக்கி மீது பிரியம் கொண்டவர் கிமி. ஹாக்கி ஆட்டத்திலும் கை தேர்ந்தவர். கோல் கீப்பரும் கூட. எதிர்காலத்தில் பயிற்சியாளராக வேண்டும் என்ற வெறியில் இருப்பவர்.
2006ம் ஆண்டு போபாலில் நடந்த ஹாக்கி பயிற்சி முகாமின்போதுதான் கிமியை அடையாளம் கண்டு சக்தே படத்தில் நடிக்கத் தேர்வு செய்தனர்.
சக் தே இந்தியாவில் நடித்து முடித்த பின்னர் ஹாக்கி டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார் கிமி. அதற்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. ஆனால் இதில் அவர் தோல்வி அடைந்து விட்டார்.
இதனால் சற்று மன வருத்தம் அடைந்துள்ள கிமி, செப்டம்பரில் நடக்கும் துணைத் தேர்வை எழுதப் போவதாக ெதரிவித்துள்ளார்.
தன்னைத் தேடி நிறைய சினிமா, மாடலிங் வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால் ஹாக்கி பயிற்சியாளராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் கிமி.


Click it and Unblock the Notifications











