சேரனின் பொக்கிஷம்!

இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களைப் பார்த்தாலே புரிந்துவிடும், இது ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் என்பது.
ஒவ்வொரு ஸ்டில்லிலும் தெரியும் வித்தியாசமான லைட்டிங் மற்றும் டிசைன்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இன்டர்நெட் மற்றும் கைத் தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தில் கடிதங்களுக்கு அதிக முக்கியத்துவமும், அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையிலும் படமாக்கி வருகிறார் சேரன்.
இந்தப் படத்தில் மீண்டும் சேரனுடன் இணைகிறார் பத்மப்ரியா. இவருடன் பெங்காலி நடிகை ரூமி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜயகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிகத்கிறார்.
நேமிச்சந்த் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சபேஷ் முரளி இசையமைக்கிறார்கள். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து செண்டிமெண்ட் போலிருக்கிறது.
மனதில் எப்போதும் பொக்கிஷமாய் தங்கிவிடும் சில இனிய நினைவுகளின் தொகுப்பே இந்த பொக்கிஷம் என்கிறார் சேரன்.
இனிய நினைவுகளாய் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர் மனதிலும் தங்கட்டும்!


Click it and Unblock the Notifications











