கோலிவுட்டின் அமர்க்களமில்லாத தீபாவளி!

By Staff

Ajith with Nayanthara
தீபாவளிக்கு இன்னும் 6 நாட்களே பாக்கியுள்ளன. ஆனால் வழக்கத்துக்கு மாறாக எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் அமைதியாக இருக்கிறது கோலிவுட். தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த பல பெரிய படங்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரைத்துறையினர், பல படங்களின் தீபாவளி வேலைகளைத் தள்ளிப் போட்டுவிட்டது ஒரு காரணம். மறுபக்கம் திரையரங்குகள் இல்லாத நிலை.

இதே காரணங்களுக்காக தீபாவளிப் பந்தயத்திலிருந்து ஓசைப்படாமல் விலகிக் கொண்டுள்ள இன்னொரு படம் குரு என் ஆளு.

கேஆர்ஜி தயாரிப்பில் செல்வா இயக்கத்தில் மாதவன், மம்தா, விவேக் நடித்துள்ள இந்தப் படம்தான் முதலில் சென்சாரானது. யு/ஏ சான்றிதழுடன், தீபாவளிக்கு தயாரான முதல்படம் என்று சொல்லப்பட்டது.

கடந்த சில தினங்களாக செய்தித்தாள்களிலும் இந்தப் படம் குறித்த விளம்பரங்கள் மற்றும் ரிலீசாகும் தியேட்டர் விவரங்கள் வெளியான நிலையில், படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த மாதிரி திரையரங்குகள் கிடைக்காததால் இந்தப் பட வெளியீட்டை நவம்பர் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய தேதிக்கு அஜீத்தின் ஏகன், சூர்யாவின் வாரணம் ஆயிரம், பரத் நடித்துள்ள சேவல் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சிலம்பாட்டம், நான் கடவுள் போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்து தள்ளிப் போடப்பட்டுள்ளன.

தீபாவளி போன்ற பெரிய சீசனில் இத்தனை குறைவான படங்கள் வெளியாவது இதுவே முதல் முறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X