இயக்குநர் சசிகுமாருக்கு துபாயில் பாராட்டு!

அண்டை மாநில திரைக் கலைஞர்களாலும் பாராட்டப்பட்ட சுப்பிரமணியபுரம் படம் இப்போது, எல்லைகளைக் கடந்து துபாய் வரை போயிருக்கிறது.
துபாய் இலக்கிய மன்றம் சார்பில் நடந்த அமீரக கலை இலக்கியத் திருவிழாவில் இயக்குநர் சசிகுமாருக்கு ஞாயிற்றுக் கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜெய்யும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றார்.
'சுப்பிரமணியபுரம் படத்துக்கு கடல் கடந்தும் இத்தனை சிறப்புகள் கிடைத்திருப்பது, அடுத்து வரும் படங்களின் தரத்தை இன்னும் மேம்படுத்தும் முனைப்பை தனக்கு ஏற்படுத்தி'யிருப்பதாக சசிகுமார் தெரிவித்தார்.
ஏற்கெனவே கேரள திரையுலகம் சார்பில் சசிகுமாருக்கு பாராட்டு விழா நடந்தது நினைவிருக்கலாம்.
Comments
சசிகுமார் சினிமா சுப்ரமணியபுரம் தமிழ் துபாய் இலக்கிய கழகம் cinema felicitation sasikumar subramanyapuram


Click it and Unblock the Notifications