twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க ஆகாஷுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    By Sudha
    |

    Vanitha and Aakash
    வரும் ஞாயிற்றுக்கிழமையன்று குழந்தை விஜய்ஸ்ரீஹரியை அவனது தாயார் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆகாஷுக்கு உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் ஆகாஷூம், நடிகை வனிதாவும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர். அவர்களின் முதல் குழந்தை விஜய் ஸ்ரீஹரி வனிதா வசம் இருக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் மனு தாக்கல் செய்தார்.

    அதில், "வனிதா மறுமணம் செய்து கொண்டுள்ளார். அவரது 2-வது கணவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2-வது கணவர் விஜய் ஸ்ரீஹரியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளான். எனவே விஜய் ஸ்ரீஹரியும் ஜோவிகாவும் என்வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்...," என்று கேட்டி்ருந்தார்.

    இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி வி. பாலசுப்பிரமணியன் விசாரித்தார். ஆகாஷ் தரப்பில் மூத்த வக்கீல் ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் வக்கீல்கள் இதயதுல்லா, சசிகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    வனிதா தரப்பில் நளினி சிதம்பரம் ஆஜரானார்.

    அவர் கூறும்போது, "உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவின் பேரில் குழந்தையை வனிதாவிடம் ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒப்படைக்கவில்லை. இது உத்தரவை மீறும் செயல். மேலும் ஆகாஷ் மனுவுக்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். முதலில் அவர் குழந்தையை ஒப்படைக்கட்டும்", என்றார்.

    இதையடுத்து நீதிபதி இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், குழந்தை விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் வக்கீல் நளினி சிதம்பரம் முன்னிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் விஜய் ஸ்ரீ ஹரியை வனிதாவிடம் ஒப்படைக்கிறார் ஆகாஷ்.

    English summary
    The Madras High Court orders actor Aakash to hand over his elder son Vijay Sri Hari to Vanitha on Sunday, January 23rd in front of Vanitha's lawyer Nalini Chidambaram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X