திருநா-வில் 'நயனதாரா'!

கருணாகரன் தயாரித்து வரும் படம் திருநா. அவரது மகன்தான் சுபாஷ். திருநா படத்தின் நாயகன். படத்தில் அவரது தாய்மாமன் வேடத்தில் வருகிறார் போஸ் வெங்கட்.
இப்படத்தில் நயனதாராவும் இருக்கிறார். ஹீரோயினாக அல்ல. ஹீரோ சுபாஷ், நயனதாரா ரசிகர் மன்றத் தலைவராக இப்படத்தில் வருகிறாராம்.
சமீபத்தில் புதுச்சேரியில் நயனதாரா ரசிகர் மன்றத்தை சுபாஷும், வெங்கட்டும் திறப்பது போல காட்சி. இதற்காக செட் போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பலரும் உண்மையான ரசிகர் மன்றம் போல, நயனதாராவும் வருகிறார் போல என நினைத்து குவிந்து விட்டனராம்.
இதையடுத்து இயக்குநர் ரவி, அனைவரிடமும் இது படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட் என்று கூறி கூட்டத்தைக் கலைத்தாராம்.
படம் குறித்துக் கூறிய தயாரிப்பாளர் கருணாகரன் ஒரு சம்பவத்தை உணர்ச்சிகமாக விளக்கினார். நான் முன்பு ஒருமுறை ஏவி.எம், ஸ்டுடியோவுக்குப் போனபோது அங்கிருந்த வாட்ச்மேன் என்னை உள்ளே விட மறுத்தார். ஆனால் இன்று நான் ஒரு தயாரிப்பாளராக, அதே ஏவி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இது என்னால் மறக்க முடியாது என்றார் உருக்கமாக.


Click it and Unblock the Notifications











