யு.எஸ்-கலக்கும் ரஜினி!

By Staff

Rajini cut out in US
தங்கள் அபிமான நடிகருக்கு கட்-அவுட் வைப்பது, பிரமாண்ட போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவையெல்லாம் அமெரிக்கர்களுக்கு இப்போதுதான் பழகத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி ரிலீசுக்கப்புறம்.

ஆனால் சிவாஜி திரைப்படத்துக்கு கூட வைக்காத அளவு பிரமாண்டமான 25 மற்றும் 45 அடி வினைல் பேனர்களை அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் வைக்க ஆரம்பித்துள்ளனர் குசேலனுக்காக, அதன் விநியோகஸ்தர்கள். ரசிகர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கெடுத்து வருகின்றனர்.

சிகாகோ, நியூஜெர்ஸி, டெட்ராய்ட் மற்றும் டல்லஸ் நகரவாசிகள் ரஜினியின் இந்த கட் அவுட்டுகளை ஆச்சர்யத்துடனும் சுவாரஸ்யத்துடனும் பார்த்தபடி செல்கின்றனர். சிலர் அந்த கட் அவுட்டுகளின் முன்பு சில நிமிடங்கள் நின்று அதுகுறித்து விசாரித்துவிட்டுச் செல்வதையும் காண முடிவதாக, டெட்ராய்ட் நகரில் வசிக்கும் கே.எஸ்.சக்திகுமார் தெரிவிக்கிறார்.

ரஜினியின் குசேலனை சரியான முறையில் அமெரிக்கர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே, பெரும் செலவில், ஹாலிவுட் படங்களுக்குக் கூட செய்யாத அளவு, விளம்பரத்துக்காக செலவு செய்து வருகிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் பேசாத பிறநாட்டு மக்களும் ரசிக்கும் வகையில் உணர்வுப் பூர்வமாக வந்துள்ளது குசேலன். எனவே அதை எந்த அளவு சிறப்பாக மக்களிடம் சேர்க்க முடியுமோ அந்த அளவு சிறப்பாகச் சேர்ப்போம், என்கிறார் குசேலன் தயாரிப்பாளர் புஷ்பாவின் கணவர் கந்தசாமி.

குசேலன் ரிலீஸ் குறித்து சக்திகுமார் இப்படிக் கூறுகிறார்:

தமிழர் மட்டுமல்ல, அமெரிக்கவாழ் இந்திய வம்சா வளி மக்கள் மத்தியில் ரஜினி படங்களுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. கனடாவில் அவரது படங்களுக்குக் கிடைக்கும் வசூலைப் பார்த்து பல அமெரிக்க விநியோகஸ்தர்களே பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

சிவாஜியின் பிரமாண்ட வெற்றி மற்றும் அமெரிக்காவில் அந்தப் படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய ப்ப்ளிசிட்டி, வார்னர் பிரதர்ஸையே யோசிக்க வைத்தது. ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாகத்தான் இப்போது ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவுடன் கூட்டுத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.

ரஜினிக்கு இணையான மற்றொரு நடிகரான கமல்ஹாசனின் தசாவதாரம் இப்போது பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதைத் தொட்ந்து, இதுவரை கோடம்பாக்கம் மற்றும் தமிழ்நாட்டு எல்லை வரை மட்டுமே இருந்த ரஜினி - கமல் பந்தயம் இப்போது அமெரிக்காவிலும் தொடர்கிறது, என்றார்.

ஆரோக்கியமான பந்தயம்தானே... தொடரட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X