வால்மீகி மேடையில் இணையும் இசைஞானி-ஷங்கர்!

இப்போதெல்லாம் தான் இசையமைத்த படத்தின் நிகழ்ச்சியைக்கூட தவிர்த்து விடுகிறார் இசைஞானி இளையராஜா.
ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார் ராஜா.
படம் வால்மீகி. ராஜாதான் இந்தப் படத்துக்கு இசை. விகடன் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் வால்மீகியில் கல்லூரி படத்தில் நடித்த இளைஞர் அகில் நாயகனாக நடிக்கிறார். மீரா நந்தன் தேவிகா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தை அனந்த நாராயணன் இயக்குகிறார்.
இவர் வேறு யாருமல்ல... மெகா இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்தவர். பாடல் வெளியீட்டு விழாவில், இளையராஜா முதல் டிஸ்கை வெளியிட ஷங்கர் பெற்றுக் கொள்கிறார்.
திரையில் இதுவரை இணையாத கூட்டணியான ஷங்கர் - இளையராஜாவை மேடையில் இணைக்கிறார் ஷங்கரின் சிஷ்யர். சுவாரஸ்யமான நிகழ்வு... அதுபற்றிய செய்திகளை நாளை இதே பக்கத்தில் பார்க்க மறந்துடாதீங்க!


Click it and Unblock the Notifications











