Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆகஸ்ட் 15-ல் கந்தசாமிக்கும் 'சுதந்திரம்'!
இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த சில தினங்களாக, தி.நகரில் உள்ள தாணுவின் அலுவலகம் திமிலோககப்படுகிறது, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் இடைவிடாத வருகை காரணமாக.
படத்தை இந்த தேதிக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்ற உறுதியில் அதன் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமிநாதனும் உள்ளார். வித்தியாசமான முறையில் பிரமாண்ட விளம்பரங்களை தாணுவுடன் இணைந்து மேற்கொள்கிறார் ராமநாதன்.
இதற்கிடையே, படத்தின் புதிய ட்ரெயிலர் ஒன்றை இயக்குநர் சுசி கணேசன் தயார் செய்து அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் வழங்கியுள்ளார்.
கந்தசாமி நிச்சயம் ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாகிவிடும். உலகம் முழுக்க 900 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது என அறிவித்துள்ளார் தாணு.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் ஏற்கெனவே சிலருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. படம் பார்த்த அனைவரும் பிரமாதம் என தாணுவுக்கு கை கொடுத்துள்ளனர்.
கந்தசாமியும் பிரமாத வசூலுடன் தனக்கு கைகொடுக்கும் என நம்புகி்றார் தாணு.
பலிக்கட்டும்!