கோலிவுட்டையும் விட்டு வைக்காத சர்வதேச நிதி நெருக்கடி!

பல நிறுவனங்கள் இப்போதைக்கு புதிய முதலீடுகளே வேண்டாம் என தங்கள் திரைப்படப் பிரிவை மூடிவிட்டன.
40 கோடி, 50 கோடி என டாப் கியரில் போய்க் கொண்டிருந்த பல இந்தி நடிகர்களின் சம்பளத்தை தடாலடியாகக் குறைத்துள்ளன கார்ப்பரேட் நிறுவனங்கள்.
ரூ.70 கோடி வாங்குவதாகக் கூறப்பட்ட அக்ஷய் குமாரின் சம்பளத்தை 10 கோடியாகக் குறைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். மற்ற நடிகர்களின் தம்பளமும் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதே நிலை கோலிவுட்டியிலும் நடைமுறைக்கு வருகிறது.
உச்ச நடிகராகத் திகழும் ரஜினிகாந்த் மட்டும் இதில் விதிவிலக்கு. தொடர்ந்து படங்கள் நடிக்காததாலும், அவரது படத்தில் பெரும்பாலும் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ரஜினிக்கு சம்பளம் பேசப்படுவதாலும் அவர் மட்டும் விதி விலக்காகிறார்.
ஆனால் மற்ற நடிகர்கள் அனைவருக்குமே சம்பளத்தைக் குறைத்தே தீர வேண்டிய நிலை.
கமல், விஜய், அஜீத், சூர்யா, விஷால், சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி, பரத் போன்றோர் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ளனர்.
இவர்களில் கமல்ஹாசனும் இப்போது சம்பளமாக எதையும பேசிக் கொள்வதில்லை. ரஜினி வழியில் அவரும் லாபத்தில் பங்கு கேட்க ஆரம்பித்துவிட்டார். அல்லது முதல் பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்து வெளியீடு வரை கொண்டு வந்து தரும் பொறுப்பை மட்டும் ஏற்கிறார்.
சமீபத்தில் அவர் இயக்கவிருந்த புதுப்படம் மர்மயோகிக்கு கமலஹாசன் ரூ.100 கோடிக்கு பட்ஜெட் கொடுத்துள்ளார். பொருளாதார சரிவு காரணமாக இப் படத்தின் தயாரிப்பு செலவைக் குறைக்குமாறு பிரமீடு சாய்மீரா நிறுவனத்தை கமலஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்
இதையடுத்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்ம் 100 கோடியில் தயாரிக்கப்பட்டால், கமல்ஹாசன் தருவதுதான் பட்ஜெட் செலவு. அதில் அவரது சம்பளம் எந்த அளவுக்கு இருந்தாலும் தயாரிப்பாளரால் கேட்க முடியாது.
நடிகைகளில் நயன்தாரா, திரிஷா,ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா, சந்தியா, நமீதா போன்ற நாயகிகள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். இயக்குனர் லிங்குசாமி படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ரூ.1.20 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
இந்த அதிகபட்ச சம்பள உயர்வுக்குக் காரணம் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைதான் என்கிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.
ஆனால் இன்றைய சூழலில் இதே அளவு தொகையை சாதாரண, பாரம்பரிய முறையில் இத்தொழிலில் உள்ள தயாரிப்பாளர்களால் தரமுடியாது என்பதால் நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்துள்ளது.
இதற்காக சங்கத்தின் அவசர பொதுக்குழு கூடுகிறது.
இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் இப்படிக் கூறுகிறார்-
நடிகர் நடிகைகளுக்கு கார்பரேட் கம்பெனிகள் அதிக சம்பளம் கொடுப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதே தொகையை சாதாரண தயாரிப்பாளர்களால் கொடுக்க இயலாது அளவுக்கு மீறி சம்பளம் கொடுப்பது என்பது வீக்கம் போன்றது அது ஒரு வியாதி. அந்த நோயை சரி பண்ண வேண்டிய கடமை தயாரிப்பாளர் சங்கத்துக்கு உள்ளது.
சம்பள பிரச்சினை பற்றி விவாதிக்க தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கிறது. அதில் தாறுமாறாக சம்பளம் உயர்த்தப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விடுக்கப்படும் சரியான சம்பளம் வழங்க முடிவுகள் எடுக்கப்படும். ஊதியத்துக்கென சில வரைமுறைகள் ஏற்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











