விக்ராந்த் திருமணம் - திரையுலகம் வாழ்த்து

சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்ட் ஓட்டலில் நேற்று மாலை நடந்த விக்ராந்த் - மானசா திருமண வரவேற்புக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் வந்து வாழ்த்தினார்.
நடிகர்கள் ஆர்யா, விஷால், ஜீவா, பார்த்திபன், ஸ்ரீகாந்த், பிரசன்னா, சிபிராஜ், பொன்வண்ணன், அருண்பாண்டியன், நடிகரும், எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ், ரமணா உள்ளிட்ட நடிகர்களும், நடிகைகள் சரண்யா, ஒய்.விஜயா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோவை தம்பி, கலைப்புலி எஸ்.தாணு, கே.பாலு, அழகன் தமிழ்மணி, சங்கிலி முருகன், அமுதா துரைராஜ், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரது மனைவி ஷோபா சந்திரசேகரன், இசையமைப்பாளர்கள் தேவா, சபேஸ்-முரளி, பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் மற்றும் பலர் வந்து வாழ்த்தினர்.
இன்று திருமணம்...
விக்ராந்த்-மானசா திருமணம் இன்று காலை 9 மணிக்கு அக்கார்ட் ஓட்டலில் நடைபெற்றது. நடிகர் விஜய் முன்னிலையில் நடந்த இந்தத் திருமணத்துக்கு ஏராளமான திரையுலகினர் வந்திருந்து வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











