'மண்ணுக்கு மரியாதை...' தமன்னாவுக்கு குஷ்பு பாராட்டு!

சென்னையில் நடந்த நீயும் நானும் பட இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு கலந்து கொண்டு வாழ்த்திப் பேசியதாவது:
நான் ஒரு தயாரிப்பாளர் என்பதால், படம் தயாரிப்பதில் உள்ள கஷ்டங்கள் எனக்கும் தெரியும். திரையுலகம், ஒரு குடும்பம் போன்றது. ஒருவர் மீது ஒருவர் பழிபோடக்கூடாது. அப்படி பேசினால், பொதுமக்கள் மத்தியில், சினிமாவில் இருப்பவர்கள் மீது மரியாதை குறைந்துவிடும்.
சினிமாவில் உள்ள பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். கலைஞரின் அரசு, தமிழ் பட உலகுக்கு பல நன்மைகளை செய்து இருக்கிறது. அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வட நாட்டில் இருந்து வரும் நடிகைகள், இந்த மண்ணுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எவ்வளவு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணமாக இருக்கிறார், தமன்னா. மிக குறுகிய காலத்தில் அவர் தமிழ் கற்றுக்கொண்டார். மற்றவர்களும் அவரை பின்பற்ற வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











