இந்தி நடிகைக்கு பளார் விட்ட காதலர்

இந்தியில் வளரும் இளம் நடிகை சோனால் செளஹான். ஜன்னத் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். அப்படம் சமீபத்தில்தான் ரிலீஸானது. இளம் கவர்ச்சி நடிகையாக பாலிவுட்டில் வளைய வர ஆரம்பித்திருக்கும் சோனால், புது சங்கடத்தில் சிக்கியுள்ளார்.
சோனாலின் காதலர் சஹீல் ஜாரு. இவரும், சோனாலும், நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்தனர். அப்போது திடீரென சோனாலுக்கும், ஜாருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்துடன், சோனாலின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார் ஜாரு.
இதை நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அடி வாங்கிய அதிர்ச்சியில் இருந்த சோனால் அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டார். அவர்களுக்குள் என்ன மோதல் என்று தெரியவில்லை.
சோனாலை அவரது காதலர் கன்னத்தில் அறை விட்டது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Comments


Click it and Unblock the Notifications