நதியாவின் மலையாளப் பிரவேசம்!

By Staff

Nadhiya
முன்னாள் ஹீரோயின், இன்றைய நம்பர் ஒன் ஆன்ட்டி நதியா மொய்தீன் மீண்டும் தன் தாய் வீடான மலையாள திரையுலகில் பிரவேசிக்கிறார்.

பாசில் இயக்கிய பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழ் ரசிகர்களின நெஞ்சங்களில் அழுத்தமாக இடம் பிடித்தவர் நதியா.

'தொடக்கூடாது, கட்டிப் பிடிக்கக் கூடாது... முத்தமா... அய்யே' என்று இவர் போட்ட நிபந்தனைகளைப் பார்த்து, '...இந்தப் பழம் புளிக்கும்' என்று வெறுத்துப்போய் நதியாவை ஓங்கட்டி விட்டனர் முன்பு. அவர்களில் கலைஞானி கமல்ஹாசனும் ஒருவர் என்பது தெரிந்த சங்கதி.

திருமணமாகி குழந்தை, குடும்பம் என மும்பையில் செட்டிலானவரை, வம்படியாகக் கூட்டி வந்தனர் எம் குமரன்... படத்துக்காக.

படத்தில் அவரது இளமை குன்றாத தோற்றத்தைப் பார்த்து, 'மேடம் நீங்க ஹீரோயினாவே நடிக்கலாம்...' என சிலர் பெரிய பிட்டைப் போட, முருங்கை மரம் ஏறிவிட்டார் நதியா.

குமரன் ரிலீசாகி கொஞ்ச நாள் வரை, 'வயசானாலும் நான் இன்னும் இளமையாத்தானே இருக்கேன். என்னைப் பயன்படுத்திக்கோங்க...' என்று இளம் இயக்குநர்களுக்கு அறிவுரை சொன்னதோடு நில்லாமல், சுந்தர் சி யோடு சண்டை படத்தில் ஒரு குத்தாட்டமும் போட்டார்.

இப்போது கைவசம் 3 தமிழ்ப் படஙக்களில் கதாநாயகியை விட வெயிட்டான ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் நதியா.

அத்தோடு நில்லாமல், தனது தாய்மொழி மலையாளத்திலும் தன் திறமையைக் காட்டப் போய்விட்டார். கதபறயும்போல் சீனிவாசன், அவரது மகன் வினீத் சீனிவாசன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகிக்கு சமமான வேடத்தில் நடிக்கிறார் நதியா.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் குசேலனை தயாரித்த செவன் ஆர்ட்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X