நமீதாவின் குடும்பப் பாங்கு!

By Staff

Namitha with Srikanth
இதுவரை கவர்ச்சிகரமாக விளங்கி வந்த நமீதா எதிர்காலத்தில் குத்துவிளக்காக, குடும்பப் பாங்கான வேடங்களில் ஜொலிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

திகட்ட திகட்ட கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால் நமீதா கொஞ்சம் கூட தயங்க மாட்டார். சேலை கட்டிக் கொள்ள வேண்டும், நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினால்தான் அவருக்கு சற்று சங்கடமாக இருக்கும்.

இதுவரை நமீதா நடித்த படங்களில் அவர் சேலை கட்டி வந்த காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் கிளாமர்தான். ஆனால் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார் நமீதா. இனிமேல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம் - அதாவது குடும்பப் பாங்கான வேடங்களுக்கு.

கிளாமர் கொஞ்ச காலத்திற்குத்தான். இத்தனை காலம் என்னை ரசிகர்கள் வரவேற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எனது கிளாமர்தான். நான் கிளாமராக நடித்தாலும் முகம் சுளிக்காத வகையில்தான் நடித்திருக்கிறேன். இது முகச் சுளிப்பாக மாறுவதற்கு முன்பு நாம் டிராக் மாறி விட வேண்டும்.

அதன்படி குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடிக்க தீர்மானித்துள்ளேன். கூடவே கிளாமரும் தொடரும். அதுதான் எனது பேஸ். அதை நான் மறக்கவே மாட்டேன் என்கிறார் நமீதா.

அத்தோடு நில்லாமல், நல்ல குடும்பப் பாங்கான கேரக்டராக இருந்தால் சொல்லுங்களேன் என்று இயக்குநர்களையும் தொணத்த ஆரம்பித்துள்ளாராம்.

இதுவரை காஸ்ட்யூம் 'செலவை' மிச்சப்படுத்தி வந்தனர். அதற்கும் வேட்டு வைக்கப் புறப்பட்டு விட்டார் நமீதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X