தூக்கியடிக்கப்பட்ட நதியா-நமீதாவுக்கு ஜாக்பாட்!

By Sudha

ஜெயா டிவியில் பிரபல நிகழ்ச்சியான ஜாக்பாட்டிலிருந்து நீக்கப்படுகிறார் நடிகை நதியா. அவருக்குப் பதில் இப்போது நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளது ஜெயா டிவி.

ஜெயா டிவியில் நடிகை குஷ்புவால் பிரபலமானது ஜாக்பாட் நிகழ்ச்சி. 7 வருடங்களாக குஷ்புதான் நடத்தி வந்தார். கற்பு விவகாரத்துக்குப் பிறகு அரசியல் ரீதியான பின்னணி தேடி அவர் திமுகவில் அடைக்கலமானார். உடனடியாக அந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் தூக்கப்பட்டார்.

ஜாக்பாட்டின் புதிய நடத்துநராக நதியா ஒப்பந்தமானார். ஆனால் இவர் வந்த பிறகு அந்த நிகழ்ச்சி அதல பாதாளத்தில் விழுந்துவிட்டதாக கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டனர். நிகழ்ச்சியை அவர் நடத்திய விதமும் ரசிக்கும்படி இல்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியை படு பாப்புலராக்கிய நமீதா, இப்போது அந்த நிகழ்ச்சியின் நான்காம் சீஸனிலிருந்து ஒதுங்கிவிட்டார். உடனே அவரை வைத்து ஜாக்பாட்டை நடத்த முடிவு செய்த ஜெயா டிவி, அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக கணிசமான சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நமீதா இந்த நிகழ்ச்சிக்காக தனது தமிழ் உச்சரிப்பை இன்னும் திருத்தமாக்கிக் கொள்ள டிரெயினிங்கெல்லாம் எடுத்திருக்கிறாராம். 'பயிற்சி இல்லேன்னாலும் பரவாயில்லை மேடம்... உங்க இப்போதைய தமிழே நல்லாதான் இருக்கு' என்று நமீதா தமிழைப் புகழ்ந்து தள்ளுகிறார்களாம் சேனல் தரப்பில்!

அதானே பாஷையா முக்கியம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X