ஏதாவது பேசி உள்ளே போய்டாதே..! கணவரை எச்சரித்த ரோஜா!!

By Staff

R.K.Selvamani
இப்போதெல்லாம் என்ன பேசினாலும் உடனே உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். இருந்தாலும் சொல்கிறேன், பிரபாகரன் என்ற பெயரை தமிழர் இதயங்களிலிருந்து யாராலும் அழிக்க முடியாது என்றார் இயக்குநர் ஆர்கே செல்வமணி.

விஜய்காந்த் நடித்த மரியாதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது:

இந்த விழாவுக்கு வரும்போது, என் மனைவி சொல்லி அனுப்பினாள், 'நீ ஏதாவது பேசி, உள்ளே போய்டாதே. தேர்தல் வேலை இருக்கிறது...' என்று.

இப்போதெல்லாம் எது பேசினாலும் உள்ளே போடுகிற நிலை உள்ளது. என்றாலும் சொல்கிறேன். தமிழர்களின் இதயங்களில் இருந்து 'கேப்டன், பிரபாகரன்' என்ற இரண்டு வார்த்தைகளை நீக்கவே முடியாது.

கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் நான் படம் எடுத்தேன். அந்த படத்தின் டைட்டிலில் உள்ள 'கேப்டன்" என்ற வார்த்தையும் 'பிரபாகரன்" என்ற வார்த்தையும் இன்று உலகையே கலக்குகின்றன. உலகத் தமிழர்களால் பெருமையாக நினைக்கப்படும் பெயர் பிரபாகரன்.

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எந்த எட்டப்பன் வந்தாலும் எங்க பிரபாகரனை அழிக்க முடியாது, என்றார் செல்வமணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X