தங்கர் புதுப் படம்: விலகினார் பிரபு தேவா

நடன இயக்குநராக இருந்து, ஒற்றைப் பாடலுக்கு திரையில் தோன்றி, நாயகனாக உயர்ந்து பின்னர் இயக்குநர் நாற்காலியை அடைந்து வெற்றிபெற்றவர் பிரபு தேவா.
இவர் இயக்கிய நான்கு படங்களில் இரண்டு சூப்பர் ஹிட். இப்போது இரு படங்களை இயக்கி வருகிறார்.
அதில் ஒன்று விஜய் நடிக்கும் வில்லு. அடுத்த படம் சல்மான்கான் நடிக்கும் போக்கிரி இந்தி ரீமேக். வில்லு படத்தை முடித்த கையோடு சல்மான் படத்தையும் முடித்து வெளியிடும் முயற்சியில் உள்ளார் பிரபு தேவா.
இந்நிலையில் அவரை மீண்டும் ஹீரோவாக்கும் முயற்சியும் ஒரு பக்கம் தொடர்ந்து வருகிறது.
அடுத்ததாக தங்கர்பச்சான் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இப்படத்தின் கதையும் தயார். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்க இருந்தனர். ஆனால் இப்போது படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என பிரபு தேவா கூறியிருப்பதாகத் தெரிகிறது.
தங்கர்பச்சான் படத்திலிருந்து பிரபு தேவா விலகியது உண்மைதான். டைரக்ஷனில் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் வேறு ஹீரோ நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, என தங்கர் தரப்பில் கூறப்படுகிறது.
சரி... தங்கரிடம் 'வாங்க' தயாராகிட்டீங்களா பிரபு தேவா??


Click it and Unblock the Notifications











