பிரகாஷ் ராஜ்-லலிதகுமார் விவாகரத்து!

தென்னகத்தின் முக்கிய வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் தமிழில் பல நல்ல படங்களை தயாரித்து வருபவர். கர்நாடகத்தைச் சேர்ந்தவரான இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது அவர் தங்கியது தியாகராய நகரில் உள்ள நடிகை டிஸ்கோ சாந்தியின் வீட்டு மாடியில்.
அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தபோது இவருக்கும் டிஸ்கோ சாந்தியின் தங்கையும் சில படங்களில் தலைகாட்டியவருமான லலிதகுமாரிக்கும் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பூஜா, மேக்னா என்ற குழந்தைகள் உள்ளன. ஒரு ஆண் குழந்தை இறந்துவிட்டான்.
இந் நிலையில் பிரகாஷ்ராஜுக்கும் லலித குமாரிக்கும் இடையே நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவரான பிரகாஷ்ராஜ் சமீபத்தில் 'சொர்' 'மால்' நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகக் கோலிவுட்டில் கூறப்பட்டு வந்தது.
இந் நிலையில் விவாகரத்து கோரி பிரகாஷ் ராஜ் சென்னை எழும்பூர் குடும்பல நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில்,
எல்லோரது குடும்பத்திலும் நடப்பதுதான் எங்கள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது.
என் மனைவிக்கும் எனக்கும் பிரச்சினை, நான் அவரை விவகாரத்து செய்யப் போகிறேன் என்பதெல்லாம் எங்கள் சொந்த விஷயம். இருவரும் சேர்ந்தே எடுத்த முடிவு இது.
பிரிவு என்பது சகஜமான விஷயம். வாழ்கிற வாழ்க்கை சரியாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் கணவன், மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் பொய் சொல்லிக்கொண்டு வாழாதீர்கள்.
வேறு பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருப்பதால் தான் நாங்கள் பிரிகிறோம் என்று சிலர் பேசலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்.
எனக்கு செயலாளராக இருக்கும் பெண்ணுடன் எனக்கு நெருக்கம் என்றும் வெள்ளித்திரை, மொழி படங்களில் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்த போனி வர்மாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் செய்திகள் பரவியுள்ளன. (இவர் தான் பிரகாஷின் மேக்-அப் அசிஸ்டெண்டும்).
ஒரு பெண்ணை எனக்கு அஸிஸ்டெண்டாக வைத்திருப்பது முழுக்க முழுக்க என் சொந்த விஷயம். இதற்கு ஏன் மீடியா இவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்று தெரியவில்லை.
நானும் என் மனைவியும் பிரிந்தாலும் ஒரே வீட்டில் நண்பர்களாக கூட இருக்கலாம் அல்லது தனித்தனியாக வாழலாம். எப்படியிருந்தாலும் எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள்தான் அப்பா, அம்மா என்றார் பிரகாஷ்.


Click it and Unblock the Notifications











