For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தயாரிப்பாளர் மீது மாளவிகா 'கசமுசா' புகார்!

  By Staff
  |

  Malavika
  கார்த்திகை படத் தயாரிப்பாளர் என்னை செக்ஸூக்கு அழைத்தார். வயிற்றில் கை வைத்து சில்மிஷம் செய்தார் என நடிகை மாளவிகா பரபரப்பு புகார் ஒன்றை நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாரிடம் கொடுத்துள்ளார்.

  இதனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

  மாளவிகா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே, கூடவே ஏதாவது செக்ஸ் புகார் வரும் என்பது வழக்கமாகிவிட்டது.

  ஏற்கனவே இரு முறை, முரளி மற்றும் புதுமுகம் டாக்டர் ராம் என தன்னோடு நடித்த நடிகர்கள் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பேற்படுத்தியவர் மாளவிகா.

  இப்போது ஆஞ்சநேயலு என்ற தயாரிப்பாளர் மீது செக்ஸ் புகார் வாசித்துள்ளார்.

  விக்ரமாதித்யாவுக்கு ஜோடியாகா மாளவிகா நடிக்கும் புதிய படம் கார்த்திகை.

  கர்ப்பமாகும் முன்பு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் மாளவிகா கர்ப்பமாவதற்குள் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலுவால் படத்தை முடிக்க முடியவில்லை.

  பைனான்ஸ் பிரச்சினை எல்லாம் தீர்ந்து மீண்டும் அவர் படமெடுக்க வரும்போது மாளவிகா 5 மாத கர்ப்பம்.

  ஆனால் வேறு வழியில்லை. பாதிப் படம் முடிந்துவிட்டதால் மாளவிகாவைத் தூக்கிவிட்டு வேறு நடிகையைப் போடவும் வழியில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று மும்பையிலிருந்து மாளுவுக்குப் போன் செய்து தன் கஷ்ட நிலைமையைச் சொல்லிப் புலம்பியிருக்கிறார்.

  மனமிறங்கிய மாளவிகா, 3 நாள் கால்ஷீட் தருகிறேன். அதற்குள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ளுங்கள். என் குடும்ப டாக்டர் கூடவே இருப்பார். அவருக்கான செலவை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூற, சந்தோஷத்துடன் தலையாட்டிய தயாரிப்பாளர் உடனே ஷூட்டிங்குக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

  பக்கத்தில் தன் டாக்டரை வைத்துக்கொண்டு ஒரு குத்துப் பாடலில் ஆடி அசத்தியிருக்கிறார் மாளவிகா. இது தவிர சில காட்சிகளிலும் நடித்துக் கொடுத்தாராம் மாளு.

  கடந்த இரு தினங்களாக மாளவிகாவின் இந்தப் பெருமைகளைச் சொல்லிச் சொல்லிப் புல்லரித்துப் போனார் ஆஞ்சநேயலு.

  கஷ்டமான நடன அசைவுகள்:

  இந்நிலையில் நேற்று ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. அப்போது சில கடினமான நடன அசைவுகளுக்கு ஆடும்படி டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜ் மாளவிகாவை வற்புறுத்தினாராம்.

  கர்ப்பமாக இருப்பதால் அது முடியாது எனக் கூறிவிட்டு கேரவனுக்குள் போய்விட்டாராம் மாளவிகா. அவரைப் பின் தொடர்ந்து தயாரிப்பாளரும் போயிருக்கிறார்.

  சில நிமிடங்களில், அய்யோ அம்மா என பெரும் அலறலுடன் கேரவனுக்குள்ளிருந்து மாளவிகா ஓடி வந்திருக்கிறார்.

  தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, நான் ஒரு கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை செக்ஸூக்கு அழைத்தார். போசிக் கொண்டிருக்கும்போதே என் வயிற்றுப் பகுதியில் தொடக் கூடாத இடத்தில் தொட்டார், என சத்தமாகக் கூறி, அங்கிருந்தபடியே நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு போன் செய்திருக்கிறார்.

  போனிலேயே சரத்திடம் புகார் கூறிய மாளவிகா, இனி ஓராண்டு கழித்துதான் இந்தப் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வேன் என்று கூறிவிட்டு மும்பை பறந்துவிட்டாராம்.

  மாளவிகா பேட்டி:

  இதுகுறித்து மாளவிகா தட்ஸ்தமிழ் நிருபரிடம் இன்று காலை தொலைபேசியில் கூறியதாவது:

  அவரை ஒரு தயாரிப்பாளர் என்று சொல்லவே கூசுகிறது. அந்தளவு அருவருப்புடன் நேற்று நடந்து கொண்டார். நான் ரொம்ப தைரியமான பெண். ஆனாலும் தனியாக கேரவனில் இருக்கும் நேரத்தில் இரவு 8 மணிக்கு திடீரென்று ஆஞ்சநேயலு உள்ளே நுழைந்து அத்துமீறி என்னைத் தொடுவார் என கனவிலும் நினைக்கவில்லை.

  நீ உண்ன்மையிலேயே கர்ப்பமடைந்திருக்கிறாயா என்று பார்க்க வேண்டும் என்றெல்லாம் உளறினார். அந்த நேரம் பார்த்து பக்கத்தில் என் டாக்டரும் இல்லை.

  ஐந்தாவது மாதம், எந்த ரிஸ்கும் எடுக்கக் கூடாது என டாக்டர் சொல்லியும் கேட்காமல், போனால் போகட்டும் என்று பரிதாபப்பட்டு நடிக்க ஒப்புக் கொண்டதற்கு கிடைத்த பரிசு இது.

  ஆஞ்சநேயலு என்ற பெயரை வைத்துக்கொண்டு ஒரு குடும்பஸ்தன் செய்கிற வேலையா இது?

  அன்று காலையிலிருந்தே கார்த்திகை படப்பிடிப்பில் டார்ச்சர்தான். அந்த டான்ஸ் மாஸ்டர் வேறு படுத்தி எடுத்துவிட்டார். ஒரு கர்ப்பிணி என்றும் பார்க்காமல் மரத்தில் தொங்கு, வேகமாக நடனமாடு என வேண்டுமென்றே தொந்தரவு செய்தார்.

  இப்போதைக்கு அந்தப் படத்தில் நடிக்க முடியாது. குழந்தை பிறந்த பிறகும் கூட ஒரு ஆண்டுவரை இப்படத்தில் நடிப்பதாக இல்லை.

  இதையெல்லாம் கேள்விப்பட்டு என் கணவர் ரொம்ப வருத்ததப்பட்டார். ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டிய நேரத்தில் தேவையா உனக்கு இதெல்லாம் என்கிறார்.

  என் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் என்னிடம் இந்த அளவு வேறுயாரும் மோசமாக நடந்துகொண்டதில்லை, என்றார் மாளவிகா.

  ஆஞ்சநேயலு புகார்:

  இதற்கிடையே, நடந்த சம்பவம் குறித்து தமிழ்-தெலுங்கு பட கவுன்சிலில் ஆஞ்சநேயலுவும் தன் பங்குக்கு புகார் செய்துள்ளார். தன்மீது எந்தத் தவறும் இல்லையென்றும், மீண்டும் மாளவிகாவை எப்படியாவது படப்பிடிப்புக்கு வரவழைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

  இதுகுறித்து படத்தின் இயக்குநர் வீரா கூறுகையில், கேரவனுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு ஏற்கெனவே இரு வெள்ளி விழாப் படங்களை தெலுங்கில் கொடுத்தவர். அவர் இப்படி நடந்து கொண்டிருப்பாரா என்பதும் சந்தேகமே.

  இருந்தாலும் மாளவிகாவை சமாதானப்படுத்தி மீண்டும் ஷூட்டிங்குக்குக் கொண்டுவரும் வேலை நடந்து வருகிறது... என்றார்.

  'எல்லாம் ஸ்டண்ட்'?:

  இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது அவர் ஒரு குண்டை வீசினார்.

  பைசா செலவில்லாமல் பெரிய பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்கள் அந்தப் படத்துக்கு. இதுவரை இப்படியொரு படம் தயாராவதே யாருக்கும் தெரியாது. ஆனால் கடந்த இரு தினங்களாக இந்தப் படம் பற்றி ஏதோ ஒரு விதத்தில் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இதைவிட பெரிய பப்ளிசிட்டி வேண்டுமா... ஆஞ்சநேயலுவும் சரி, மாளவிகாவும் சரி மகா புத்திசாலிகள். இதில் கவுன்சிலுக்கு என்ன வேலை இருக்கிறது, என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.

  ஒரு கர்ப்பிணியுடன் ஆஞ்சனேயலு தவறாக நடந்தது உண்மையென்றால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது கவுன்சிலின் கடமை. இது குறித்து முழுமையாக விசாரிப்பதே நல்லது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X