twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீனாவுக்கு போகும் பிரமிட் சாய்மீரா!

    By Staff
    |

    Pyramid Saimira Group Signs Aggrement with Jiangsu Longzhe
    சீன இசை ஆராய்ச்சிக் கழகத்துடன், பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிட்டெட் நிறுவனம், கலை மற்றும் கலாச்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்தியா, சீனா இடையிலான கலாச்சார பரிமாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என பிரிமிட் சாய்மீரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சீன இசை ஆராய்ச்சிக் கழகம், சீன அரசின் கலாச்சாரத் துறையால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் கலாச்சார அமைப்பாகும்.

    புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஜியாங்சு பிரமிட் லாங்ஷே குழுமம் என்கிற புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனம், சீனாவில் திரைப்படங்களை விநியோகிப்பது, தியேட்டர்களை நிர்வகிப்பது, பிற பொழுதுபோக்கு, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவற்றில் ஈடுபடும்.

    கலை, திரைப்படம், டிவி, இசை மற்றும் நடனத் துறையில் சிறந்து விளங்குவோரை சீனாவுக்கு அழைத்துச் சென்று நிகழ்ச்சிகள் வழங்க பிரமிட் நிறுவனம் உதவும். அதேசமயம், சீன நிறுவனம், பிரமிட் நிறுவனம், சீன கலாச்சார துறையில் ஈடுபடத் தேவையான கொள்கை வழிகாட்டி, வர்த்தக ஆலோசனைகள் ஆகியவற்றை அளிக்கும்.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிரமிட் நிறுவனம் மிகப் பெரிய கலைக் குழுவை சீனாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்தக் குழுவினர் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மிகப் பெரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர் என்று பிரமிட் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X