ஒரு வாரம் தள்ளிப் போனது ராணா பட பூஜை!
ராணா படத்துக்காக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன ஏவிஎம் ஸ்டுடியோவில். இன்னும் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்கவில்லை என்பதால் இன்று நடக்கவிருந்த பட பூஜை தள்ளிப் போய்விட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை எளிமையாக ஏவி எம் பிள்ளையார் கோயிலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து படத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வி4 ரியாஸிடம் விசாரித்தபோது, 'அநேகமாக இந்த மாத இறுதியில் படத்தின் பூஜை இருக்கும். ஸ்கிரிப்ட் மற்றும் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் சூப்பர் ஸ்டாரும் இயக்குநரும் பிஸியாக உள்ளனர்" என்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் ஏழு நாயகிகள் யார் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தீபிகா படுகோன் மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
இவருக்கு இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சி, சமஸ்கிருதப் பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார்கள்.
பூஜை போட்ட கையோடு, ரஜினி - தீபிகா டூயட் மட்டும்தான் எடுக்கப்பட உள்ளதால், மற்ற நடிகர் நடிகை தேர்வு குறித்து பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.


Click it and Unblock the Notifications











