சசியை வளைத்துப் போட்ட மணி!

By Staff

Jay, Swathy and Sasikumar
திறமையுள்ளவர்களை எப்போதுமே அரவணைத்துச் செல்வது மணிரத்னத்தின் பாணி.

இப்போது அவரது காம்பவுண்டுக்குள் அடிக்கடி தென்படும் இளைஞர் சசிகுமார். சுப்பிரமணியபுரம் என்ற ஒரே படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அதே இயக்குநர்.

சில தினங்களுக்கு முன் மணிரத்னமே தேடிப்போய் இந்தப் படத்தைப் பார்த்தார். பார்த்த கையோடு சசிக்கு ஒரு போன்போட்டு நேரில் வரச்சொன்னவர், அவரது திறமையைப் பாராட்டித் தள்ளினாராம். கூடவே ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் செய்து தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.

சிறுவயதிலிருந்து தான் பார்த்துப் பிரமித்த ஒரு பெரிய இயக்குநரே கேட்கும்போது மறுக்க முடியுமா... உடனே ஒப்புக் கொண்டாராம் சசி.

மணிரத்னத்தைப் பார்க்கும்வரை தானே தயாரித்து இயக்கி நடிக்கும் ஐடியாவில்தான் இருந்தாராம். மணிரத்னத்தின் வேண்டுகோளால் தயாரிப்பை மட்டும் கைவிட்டுள்ளார் சசிகுமார். இந்தப் புதுப்படத்தை இயக்குவதோடு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் போகிறாராம்.

சசியைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்களாம். விரைவில் பூஜை குறித்த அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X