ரேகா- சத்ருகன் சமரசம்!

Poonam Sinha, Shatrughan Sinha and Rekha
சண்டைக் கோழிகளாக இருந்து வந்த முன்னாள் கனவுக் கன்னி ரேகாவும், சத்ருகன் சின்ஹாவும் தற்போது சமரசமாகி விட்டனர். சத்ருகனின் மனைவியம், ரேகாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனராம்.

நடிகராக இருந்து பின்னர் அரசியல்வாதியான சத்ருகன் சின்ஹாவுக்கும், ரேகாவுக்கும் எப்போதுமே ஆகாது. இருவரும் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் விமர்சித்தபடி இருப்பார்கள்.

ரேகாவை பகிரங்கமாகவே திட்டுவார் சத்ருகன். ஆனால் அதெல்லாம் பழைய கதையாகி விட்டது. இப்போது இருவரும் தோழமையுடன் கை குலுக்கிக் கொண்டு விட்டனராம்.

அத்தோடு நில்லாமல் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ரேகாவும், சத்ருகனின் மனைவி பூனம் சின்ஹாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனராம். ஒட்டுமொத்த சத்ருகனின் குடும்பத்தினரும் இப்போது ரேகாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்களாம்.

ரேகாவு், பூனம் சின்ஹாவும் ஒரே வருடத்தில், அடுத்தடுத்த நாட்களில் (பூனம் அக்டோபர் 9, ரேகா 10) பிறந்தவர்கள் என்பது விசேஷமானது. இந்த விசேஷ ஒற்றுமையும் இவர்களுக்குள் நட்பை பலப்படுத்தி விட்டதாம். தினசரி இருவரும் பேசிக் கொள்கிறார்களாம்.

இதையெல்லாம் சத்ருகன் பெருமையுடன் பார்த்து ரசிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X