தனுஷ் பட வாய்ப்பை மறுத்த ஸ்ருதி

படங்களில் நடிப்பது குறித்த ஸ்ருதியின் முடிவில் தான் எந்தவிதத்திலும் தலையிடுவதில்லை என கமல் அறிவித்துவிட்டதால், தன் விருப்பத்துக்கேற்ப கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார் ஸ்ருதி.
தனது முதல் கதாநாயகனாக அவர் தேர்ந்தெடுத்திருப்பது மாதவனை.
ஆரம்பத்தில் கமல் மகளுடன் ஜோடி சேர முடியுமா எனத் தயக்கத்துடன் நின்றவர்கள், அவரது ஸ்டில்கள் மற்றும் பேட்டிகளைப் பார்த்த பிறகு தங்கள் படங்களிலும் நடிக்க அழைப்பு விடத் துவங்கியுள்ளனர்.
ஸ்ருதிக்குப் பிடித்தமான, பொருத்தமான கதைகளுடன் தினசரி யாராவது ஒரு இயக்குநர் அல்லது ஹீரோ அவரை அணுகிய வண்ணம் உள்ளார்களாம்.
அதில் ரஜினியின் மருமகன் தனுஷும் ஒருவர் என்பது சமீபத்திய தகவல். ஆனால் இந்த அழைப்பை நிராகரித்து விட்டாராம் ஸ்ருதி.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலேயே மாதவன் படத்தில் நடிக்க சம்மதித்தாகவும், மற்றபடி தன் தன் நாட்டமெல்லாம் ஒரு பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் பரிணமிப்பதுதான் என்றும் தெளிவாகக் கூறிவிட்டாராம் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











